யாழில் மீனவர்களிடையே முறுகல்: பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு!
2024-03-04 12:46:15
நேற்று (03) ஞாயிற்றுக் கிழமை வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பொலிஸாருடனும் முறன்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியமையால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் பெருமளவு காணிகளை விடுவிக்கும் இராணுவம்!
2024-03-04 12:06:22
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இராணுவம் வசமுள்ள 164 ஏக்கர் நிலங்களை எதிர்வரும் 10ஆம் திகதி விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இராணுவம் வசமுள்ள 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் இராணுவம் வசமுள்ள 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஒரே நேரத்தில் 90 பேர் பலி!
2024-03-04 11:29:54
இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் காசாவில் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் கூரப்படுகின்றது.

யாழை வந்தடைந்தது சாந்தனின் வித்துடல்! பெருந்திரளான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி:
2024-03-03 18:51:46
இந்திய, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த (28) திகதி உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரிகள் இருவர் உட்பட பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை கடல் வளத்தை சூறையாடும் இந்திய விசைப் படகுகளுக்கு எதிராக இந்திய கடல் எல்லையில் கறுப்புக் கொடி போராட்டம்!
2024-03-03 18:04:44
இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய விசைப் படகு இழுவை வலை மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்து மீனவர்கள் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (03) இந்திய கடல் எல்லைக்கு அருகே சென்று மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எம்.கே. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில்!
2024-03-03 11:48:51
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் நேற்று (02) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
2024-03-03 07:26:46
இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகத மேற்கொள்ளப்படும் குறித்த போராட்டத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பம்: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
2024-03-02 12:40:04
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று கடும் வெப்பமான கால நிலை நிலவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவான நேரத்தில் பாக்கு நீரினையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்த 13 வயது சிறுவன்!
2024-03-02 11:57:42
திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்த் (13 வயது) தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் 9 மணித்தியாலம் 37 நிமிடம் 54 செக்கனில், 32 கிலோ மீற்றர் தூரத்தை நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் உட்பட 30 பேர் கைது!
2024-03-02 11:18:50
நேற்று (1) காலை காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேச சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய குழு நியமனம்!
2024-03-01 20:58:39
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் ஐவரடங்கிய குழு இன்றைய தினம் (01) நியமிக்கப்பட்டது.

புதிய பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்:
2024-03-01 13:18:01
புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (2024.02.29) பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கோர விபத்து! பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!
2024-03-01 11:35:36
யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை, ஐயா கடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (01) காலை இடம் குறித்த விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் சிவநாவலன் பரணிதரன் (18 வயது) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேர் கொண்ட இந்திய சைக்கிள் ஆர்வலர்கள் குழு யாழிற்கு!
2024-03-01 10:55:53
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மூன்று பேர் கொண்ட இந்திய சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
குறித்த குழுவினர் முதலில் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு சென்று கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளியைச் சந்தித்து களந்துரையாடினர்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை கோரும் வழக்கு ஒத்திவைப்பு: கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறிதரன்!
2024-02-29 18:25:13
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
குறித்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், டாக்டர் சத்தியலிங்கம், குகதாஸன் ஆகியோர் கையொப்பமிட்டதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க போராட்டத்திற்கு தீர்வு: ஆளுநர் உறுதி
2024-02-29 17:58:28
யாழ்ப்பாணம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி வழங்கியுள்ளார்.
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் இன்று (29) காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பலத்த ஆதரவு!
2024-02-29 13:06:04
இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து எதிர்வரும் (03.03.2024) கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 156