yarlathirady.com

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை கோரும் வழக்கு ஒத்திவைப்பு: கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறிதரன்!

[2024-02-29 18:25:13] Views:[9]

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

குறித்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், டாக்டர் சத்தியலிங்கம், குகதாஸன் ஆகியோர் கையொப்பமிட்டதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சியின் நலன்கருதி புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தனது தலைமை பதவியை துறந்துள்ளார்.

வழக்கின் பிரதிநிதிகளில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வழக்கிற்கு இன்றையதினம் வருகை தராத காரணத்தால் வழக்கானது சித்திரை 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி புவீந்திரன் ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.