யாழை வந்தடைந்தது சாந்தனின் வித்துடல்! பெருந்திரளான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி:
[2024-03-03 18:51:46] Views:[11]
இந்திய, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த (28) திகதி உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரிகள் இருவர் உட்பட பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட எடுத்துவரப்பட்டு,
கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட பல இடங்களில் பெருந்திரளான மக்களின் அஞ்சலி இடம்பெற்று பின்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பூதவுடலுக்கு சாந்தனுடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கலிகைச்சந்தி, துன்னாலை, மந்திகை ஊடாக மாலிசந்திமைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தை ஊர்திப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்து நெல்லியடி மத்திய பஸ் நிலையத்திற்கு பிற்பகல் 3.00 மணிக்கு ஊர்தி வந்துசேர்ந்தது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு மக்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்ததுள்ளது.
தற்போது சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
அங்கு பெருந்திரளாக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.










