yarlathirady.com

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பலத்த ஆதரவு!

[2024-02-29 13:06:04] Views:[10]

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து எதிர்வரும் (03.03.2024) கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த (26.02.2024) அன்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்கு குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் தவறாது அனைத்து அங்கத்தவர்களையும் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அண்மைக்காலமாக இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் அதிகரித்துக் காணப்படுவதால் வடமராட்சி கிழக்கில் கறுப்புக் கொடி போராட்டத்திற்கு பலத்த ஆதரவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.