புதிய பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்:
[2024-03-01 13:18:01] Views:[9]
புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (2024.02.29) பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் காவற்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்படி, அவர் இதுவரை அந்த பதவியை ஆற்றி வந்தார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை பொலிஸ் திணைக்களத்தில்உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.










