எம்.கே. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில்!
[2024-03-03 11:48:51] Views:[9]
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் நேற்று (02) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,
அவர் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றிற்காக கொழும்புக்கு வருகைத் தந்த அவர் வழக்கு நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (01) காலை சென்னைக்கு புறப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிப்படைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










