மூன்று பேர் கொண்ட இந்திய சைக்கிள் ஆர்வலர்கள் குழு யாழிற்கு!
[2024-03-01 10:55:53] Views:[9]
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மூன்று பேர் கொண்ட இந்திய சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
குறித்த குழுவினர் முதலில் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு சென்று கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளியைச் சந்தித்து களந்துரையாடினர்.
பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாண கலாசார நிலையம் வரை சைக்கிள் சவாரி ஒன்றினை மேற்கொண்டனர். அவர்களுடன் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளியும் கலாசார நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
அழகான இலங்கை தீவு முழுவதும் மேற்கொள்ளும் சைக்கிள் பயணத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த கொன்சியூலர் ஜெனரல், குறித்த பயணம் சாகசங்கள் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களால் நிரப்பப்பட வேண்டும் என்று குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.










