yarlathirady.com

WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.

[2026-04-19 19:27:21] Views:[59]

தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்டா (Meta) நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த விபரங்கள் இதோ

01.இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த 'ஒரே கைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்' வசதி இப்போது ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கிறது.

02.அடுத்து புகைப்படங்களை அனுப்பும் முன்னரே அதன் பின்னணியை (Background) மாற்றவும், தேவையற்ற பொருட்களை அகற்றவும் 'மெட்டா ஏஐ' வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

03.மற்றும் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கும் அல்லது ஆண்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கும் மாறும் போது, உரையாடல் வரலாறுகளை (Chat History) எவ்விதச் சிக்கலுமின்றி மிக எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

04.போனில் இடம் பற்றாக்குறையைத் தவிர்க்க, அதிக கொள்ளளவு கொண்ட பெரிய கோப்புகளை (Large Files) மட்டும் கண்டறிந்து அழிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

05.நீங்கள் ஒரு எமோஜியைத் தட்டச்சு செய்யும் போது, அதற்கு இணையான சுவாரஸ்யமான ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தானாகவே பரிந்துரைக்கும்.

06.உரையாடலின் சூழலைப் புரிந்து கொண்டு, அதற்குப் பொருத்தமான பதில்களைத் தயாரித்து வழங்க செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனைத்து வசதிகளும் பயனர்களின் தனியுரிமையைப் (Privacy) பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்டா உறுதி அளித்துள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.