yarlathirady.com

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க போராட்டத்திற்கு தீர்வு: ஆளுநர் உறுதி

[2024-02-29 17:58:28] Views:[9]

யாழ்ப்பாணம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி வழங்கியுள்ளார்.

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் இன்று (29) காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்து சென்றார்.

பின்னர், போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (29) பிற்பகல் 6.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதி வழங்கினார்.

மேலும், ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.