yarlathirady.com

வடக்கில் பெருமளவு காணிகளை விடுவிக்கும் இராணுவம்!

[2024-03-04 12:06:22] Views:[10]

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இராணுவம் வசமுள்ள 164 ஏக்கர் நிலங்களை எதிர்வரும் 10ஆம் திகதி விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு, காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்டச் செயலர், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இராணுவ உயரதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இராணுவம் வசமுள்ள 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் இராணுவம் வசமுள்ள 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.

இந்த நிலங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.