மிகக் குறைவான நேரத்தில் பாக்கு நீரினையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்த 13 வயது சிறுவன்!
[2024-03-02 11:57:42] Views:[11]
திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்த் (13 வயது) தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தனுஸ்கோடி முதல் தலை மன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அவர் 9 மணித்தியாலம் 37 நிமிடம் 54 செக்கனில், 32 கிலோ மீற்றர் தூரத்தை நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










