இலங்கை கடல் வளத்தை சூறையாடும் இந்திய விசைப் படகுகளுக்கு எதிராக இந்திய கடல் எல்லையில் கறுப்புக் கொடி போராட்டம்!
[2024-03-03 18:04:44] Views:[9]
இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய விசைப் படகு இழுவை வலை மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்து மீனவர்கள் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (03) இந்திய கடல் எல்லைக்கு அருகே சென்று மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நெடுந்தீவு, பலாலி, வெற்றிலைக்கேணி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்ட படகுகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இன்று கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் கடற்றொழிலாளர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்காததால் பாம்பன் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 500இற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










