yarlathirady.com

சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் உட்பட 30 பேர் கைது!

[2024-03-02 11:18:50] Views:[10]

நேற்று (1) காலை காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

சம்பவ தினமான நேற்று முன்தினம் (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017.03.10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.