வாகன விபத்தில் யாழ் இளைஞன் மரணம்..!!
[2026-06-17 22:34:20] Views:[32]
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.










