yarlathirady.com

ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவு திகதி தொடர்பான அறிவித்தல்

[2026-06-17 22:28:18] Views:[48]

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை நாளை (18) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250.00 ரூபாய் பணம் நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர, இக்கொடுப்பனவு நடவடிக்கைகள் 'அஸ்வெசும' முதற்கட்ட பயனாளிகளுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது 'அஸ்வெசும' வங்கி கணக்குகள் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.