yarlathirady.com

வடதாரகை படகு மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது

[2026-06-16 11:29:34] Views:[76]

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு, திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான பயணத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அந்நிலையில், குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதில் வடதாரகையின் திருத்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நெடுந்தாரகை படகு தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்தப் படகும் விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் இயந்திர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், குமுதினி படகும் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.