வடக்கு ஆளுநர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கிடையில் சந்திப்பு
[2026-06-09 22:35:03] Views:[54]
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.










