யாழில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் கொலை..!
[2026-06-01 22:48:16] Views:[92]
யாழ்ப்பாணத்தில் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தி தப்பியோட முயன்ற நபரை சம்பவ இடத்திலேயே யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










