சைபர் அச்சுறுத்தல்களை நம்ப வேண்டாம்: பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்..!
[2026-05-30 23:02:44] Views:[94]
போக்குவரத்து குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தவுள்ளதாக தெரிவித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏமாற வேண்டாமென பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு தவறான குறுஞ்செய்திகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.










