பெருமளவு வெளிநாட்டு சிகரட்டுடன் 18 பேர் கைது!
[2026-05-30 23:00:53] Views:[96]
சட்டவிரோதமான முறையில் 31,380,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 சீனப் பிரஜைகளும் 2 இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளை சோதனையிடும்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு. மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.










