அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்...!
[2026-05-29 11:46:41] Views:[83]
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியவர்களுக்காக 3,493,915,000.00 ரூபா நிதி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.










