யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதி
[2026-05-28 22:25:53] Views:[66]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜனின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச்சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










