மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு...!
[2026-05-25 21:33:17] Views:[111]
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும், வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனைப் பெற்றவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வாசிப்பிற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது










