நல்லூர் சிவன் கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
[2026-05-22 17:35:32] Views:[98]
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும் என கூறப்படுகிறது.










