மிகப் பலத்த மழை
[2026-05-15 16:47:57] Views:[159]
தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு வடகிழக்காக தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதால் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேல், வடமேல்,மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் மாத்தறை, காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.










