சீனாவில் இயந்திரக் கோளாறால் விமானம் விபத்து..!!
[2026-05-02 21:03:33] Views:[143]
சீனாவின் ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில், இன்று சனிக்கிழமை சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகவும், "ஒழுங்கான முறையில்" விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், கூறப்படுகிறது.
இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட விபத்து
இன்று நண்பகல் அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது "இயந்திரக் கோளாறு" ஏற்பட்டதாகக் கூறியுள்ளது. விமானப் பணியாளர்கள் உடனடியாக நடைமுறைகளைப் பின்பற்றினர், இறுதியில் விமானம் ஜெட் பாலத்தின் மீது "பகுதியளவு மோதியது" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.










