தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்.
[2026-05-01 16:49:39] Views:[81]
யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 79 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.
அந்நிலையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் நேற்றைய தினம் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை, தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.










