ராஜஸ்தான் ரோயல்ஸின் அதிரடி துடுப்பாட்டம்: தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி
[2026-04-29 17:13:16] Views:[109]
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.
ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆடி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.










