CSK vs MI: தோனி மட்டுமல்ல மற்றொரு அதிரடி ஆட்டக்காரரும் விளையாடுவது உறுதி..!!
[2026-04-23 11:41:19] Views:[122]
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் மகேந்திரசிங் தோனி மட்டுமல்ல, மற்றொரு சீனியர் வீரரும் கம்பேக் கொடுப்பது உறுதியாகி உள்ளது. இதனால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாட உள்ளது.
காயம் காரணமாக முதல் 6 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த மகேந்திரசிங் தோனி, தற்போது முழு பிட்னஸை எட்டியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.
தோனி மட்டுமல்ல மற்றொரு சீனியர் பேட்டர் ரோஹித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக, ரோஹித் சர்மா கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. தசைபிடிப்பு பிரச்சினை தற்போது சரியாகிவிட்டதால், அவரை சேர்க்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.










