யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது...!
[2026-04-22 18:51:23] Views:[118]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 04 சிறு படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள், சுமார் 43 லிட்டர் மண்ணெண்ணெய், மின்கலங்கள் (Batteries), நீரில் மூழ்கிப் பயன்படுத்தக்கூடிய 11 மின்விளக்குகள், நங்கூரங்கள் மற்றும் 03 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் சான்றுப் பொருட்களாக மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










