yarlathirady.com

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம்

[2026-04-19 21:41:28] Views:[108]

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமை பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையம் வடிவமைக்கப்பட்ட நாளாந்த கொள்ளளவை அடையாமல், தற்போது சுமார் 60 கன மீட்டர் (m³/day) அளவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

நெடுந்தீவின் நீண்டகால குடிநீர் தேவைக்கான நிரந்தரத் தீர்வாக, 300 கன மீட்டர்/நாள் கொள்ளளவு கொண்ட புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான விரிவாக்கத் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் தொடங்கியுள்ளது.

இத்திட்டம் நெடுந்தீவின் முழுக் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய நிலையத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.