yarlathirady.com

மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்.

[2026-04-16 10:40:16] Views:[85]

நேற்று (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.


இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ஊடாக உடனடியாக மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.'டித்வா' இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிர்வாகச் செலவினங்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பிலும் ஆளுநரால் அதிகாரிகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. கலந்துரையாடலில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.