இன்றும் புத்தாண்டு நிமித்தம் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
[2026-04-13 11:23:02] Views:[60]
இன்றும் (12) புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வரு வருவதுடன்
மேலதிக பேருந்துகளை பயணிகளின் தேவைக்கேற்ப ஈடுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்
கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கும், தூர இடங்களிலிருந்து கொழும்புக்கும் என இரு கட்டங்களாக இந்தச் சேவை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் வரை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதுடன், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கான சேவை இடம்பெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது.










