7,000 மெட்ரிக் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்..!
[2026-04-06 22:13:37] Views:[79]
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பைக் கொண்ட 'எண்டோவர்' (ANDOVER) கப்பல் ஹம்பாந்தோட்டை லாஃப்ஸ் முனையத்தை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, எரிவாயு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் வினைத்திறனான முறையில் எரிவாயுவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.










