yarlathirady.com

இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள CSK மற்றும் RCB அணிகள்..!

[2026-04-05 11:44:15] Views:[149]

IPL 2026 தொடரில், தங்களின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகரமாக துவங்கிய பெங்களூரு அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் இன்று சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இந்த நட்சத்திர அணிகள் மோதும் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆர்சிபி தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தநிலையில், அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

இதற்கிடையில், காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ், இந்த போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 35 போட்டிகள் விளையாடியநிலையில், அதில் 21 வெற்றிகளை சிஎஸ்கே பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆர்சிபி 13 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்நிலையில், வெற்றியைத் தொடர RCB முயற்சி செய்தாலும், தோல்வி தொடரை முறியடிக்க, CSK கடும் போராட்டம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


RCB

விராட் கோலி
பிலிப் சால்ட்
ரஜத் பட்டிதார் (கேப்டன்)
ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)
டிம் டேவிட்
ரோமாரியோ ஷெப்பர்ட்
க்ருனால் பாண்ட்யா
புவனேஷ்வர் குமார்
அபிநந்தன் சிங்
ஜேக்கப் டப்பி
சுயாஷ் சர்மா

Impact Players

தேவ்தத் படிக்கல்
ஜேக்கப் பெத்தெல்
ரசிக் சலாம் தார்
கனிஷ்க் சௌஹான்
வெங்கடேஷ் ஐயர்


CSK

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)
ஆயுஷ் மாத்ரே
டெவால்ட் பிரேவிஸ்
சர்பராஸ் கான்
சிவம் துபே
ஜேமி ஓவர்டன்
நூர் அகமது
அன்ஷுல் காம்போஜ்
மேட் ஹென்றி
கலீல் அகமது

Impact Players

கார்த்திக் சர்மா
பிரஷாந்த் வீர்
ராகுல் சஹர்
ராமகிருஷ்ணா கோஷ்
குர்ஜப்நீத் சிங்


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.