இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த துவிச்சக்கர வண்டி அணி
[2026-04-03 10:47:54] Views:[62]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் Team Bison அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது .
'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த அணியினரை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர்










