தலைமன்னாரில் தீ விபத்து
[2026-04-01 18:38:43] Views:[93]
நேற்றையதினம்(31) தலை மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள பனை மரத் தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இந்தத் தீ விபத்தில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது, எனினும் குறித்த தீ விபத்தில் உயிர் சேதமோ, வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிய வருகிறது.
இந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதலை மன்னார் பொலிஸ் நிலைய போலீசார் செல்வேரி ராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர்,தலைமன்னார் கடற்படை, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.










