வடக்கில் 51 பேருக்கு அரச சேவை நியமனம்.
[2026-03-25 12:21:31] Views:[175]
வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










