yarlathirady.com

யாழில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயம்.!!

[2026-03-24 11:29:23] Views:[161]

சுன்னாகம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் அவர்களும் குறித்த நபர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண்ணின் கணவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுன்னாகம்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.