வேலணை பிரதேச சபையால் "நெல்" உலரவைக்கும் தளங்களை அமைக்க திட்டம்
[2026-03-20 12:11:42] Views:[39]
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் செய்கையாளர்களை ஊக்குவிக்கவும், அறுவடைகளை பாதுகாக்கும் வகையிலும் நெல் உலர் மேடை அமைக்க வேலணை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மழை நீரை நம்பி ஒரு பருவகால நெல் செய்கையை முன்னெடுக்கும் பகுதியாக வேலணை பிரதேச சபை இருப்பதாலும் கட்டாக்காலிகாளின் தொல்லை இன்னொரு புறமாகவும் தாக்கத்தை செலுத்தி வருவதால் செய்கையாளர்கள் நஸ்டங்களை எதிர்கொள்ளும் நிலை இருக்கின்றது.
அதேபோன்று செய்கையாக்கப்படும் நெல்லை உலரவைக்கும் தளம் இன்மையால் விவசாயிகள் பல நெருக்கடிகளை வருடாவருடம் சந்தித்தும் வருகின்றனர்.
இன்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் வேலணை பிரதேச ஆழுகைக்குள் உப அலுவலக ரீதியாக ஒவ்வோர் உலரவிடும் தளங்களை விவசாய சம்மேளனங்களின் ஆலோசனையுடன் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.










