எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு.
[2026-03-20 11:37:35] Views:[24]
QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் மற்றும் கடற்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.










