யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி..!
[2026-03-13 11:15:04] Views:[19]
பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும். எனவே, மக்களே மக்களோடு இணைந்து வலுவூட்டல்களை அடையாளம் காணவேண்டும்கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.










