yarlathirady.com

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்த நபர்

[2026-03-12 21:56:38] Views:[33]

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன், மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து, மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை, மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு, அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு, வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில், மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர், அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து, அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். அதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.