யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ..!
[2026-03-08 10:57:13] Views:[13]
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
எரிபொருள் தாங்கியானது நேற்றைய தினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்ப முயற்சித்தது.
எரிபொருளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரிய வருகிறது.
தீ விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.










