119ஆவது வடக்கின் சமர்.
[2026-03-07 21:40:27] Views:[23]
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முரளி திசோன் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த யாழ். மத்திய கல்லூரியை முரளி திசோன், ஐயாதுரை கபிஷேக், ஜேசுதாசன் நிதர்சன் ஆகியோர் பொறுப்புடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி மீட்டெடுத்து மகத்தான வெற்றியை ஈட்டச் செய்தனர்.










