கடற்படையினரின் அதிரடி: கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் யாழில் கைது..!
[2026-03-05 21:20:55] Views:[11]
யாழ் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக இலங்கை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










