KKS கடற்கரையில் மாபெரும் இசை நிகழ்ச்சி..!!
[2026-03-05 21:12:46] Views:[14]
யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6,7மாற்றும் 8ஆம் திகதிகளில் மதியம் ஒரு மணி முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று நடைப்பெற்றது.
தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.
இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏட்பாடுகள் மேட்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.










