yarlathirady.com

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பான அறிவித்தல்...!!

[2026-03-04 20:35:51] Views:[37]

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி, முதல் கட்டம் மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.

செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 22 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும்.

செயன்முறை பரீட்சைகள் முடிந்தவுடன், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான திகதி குறித்து முடிவு செய்யப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.