yarlathirady.com

அரச சேவையில் இணைய வாய்ப்பு: வெற்றிடங்களை நிரப்ப அனுமதி..!

[2026-03-04 19:16:40] Views:[12]

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளன.

முக்கிய அமைச்சுக்களின் விபரங்கள் வருமாறு:
பாதுகாப்பு அமைச்சு: 9,794
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு: 1,915
சுகாதார மற்றும் ஊடக அமைச்சு: 776
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு: 339
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு: 300
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் அபிவிருத்தி அமைச்சு: 214
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு: 67

மாகாண சபைகளின் விபரங்கள் வருமாறு:
வட மாகாண சபை: 411
வடமேல் மாகாண சபை: 401
கிழக்கு மாகாண சபை: 282
சபரகமுவ மாகாண சபை: 236
ஊவா மாகாண சபை: 146

இந்தப் பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதுடன், அரச நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.