யாழில் பெருமளவிலான கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது..!!
[2026-03-03 12:10:12] Views:[12]
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை கப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பருத்தித்துறை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி வே.ரஷிகரன் தலைமையில் மதுவரிப் பரிசோதகர் கனநாதன் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே 115லீற்றர் கசிப்பு, 1010லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தப்பித்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மதுவரி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.










